முகமட் அலி 74 வயதில் மரணம்

Ali

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமட் அலி இன்று அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்தில் உள்ள Phoenix நகரில் காலமானார். இவருக்கு அப்போது வயது 74. இவர் நுரையீரல் சம்பந்தமான நோயினாலும், Parkinson நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தவர்.
.
இவர் தனது 12 வயது முதல் குத்துச்சண்டை பயிற்சி பெற்று, 22 ஆவது வயதில் தனது முதல் குத்துச்சண்டை வெற்றியையும் பெற்று இருந்தார்.
.
குத்துச்சண்டையில் மட்டுமல்லாது அரசியல், மதம், சமூகம் என பல துறைகளிலும் இவர் பிரபலமாக இருந்தார். அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தையும் இவர் கடுமையாக எதிர்த்தார். வியட்னாம் யுத்தத்தில் போராட அரசு அழைப்பு விடுத்தபோது அதை மறுத்து, உயர் நீதிமன்றம் வரை சென்று போராடினார். அதனால் அவர் கைது செய்யப்பட்டு, அவரின் குத்துச்சண்டை வெற்றிக்கான சான்றிதல்களும் பறிக்கப்பட்டன.1971 ஆம் ஆண்டிலேயே இவர் அவற்றை மீண்டும் பெற்றார்.
.
இவர் தன்னை ஒரு இஸ்லாமியராக மதம் மாற்றமும் செய்து, Nation of Islam அமைப்பில் இணைந்து, தனது பெயரையும் Mohammad Ali என்று மாற்றினார். பிறப்பில் இவரின் பெயர் Cassius Marcellus Clay Jr, ஆகும்.
.

மொத்தம் 4 தடவைகள் திருமணம் செய்த இவருக்கு 7 பெண் பிள்ளைகளும், 2 ஆண் பிள்ளைகளும் உண்டு. இவரின் மகளான Laila Ali யும் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆவார். Laila 24 தடவைகள் போட்டியிட்டு 24 தடவைகளிலும் வெற்றி பெற்றிருந்தார்.
.