முடிந்த தாய்வான் தேர்தல் அமெரிக்காவுக்கு பாதிப்பு

Taiwan

தாய்வானில் 24 ஆம் திகதி இடம்பெற்ற கிராம, நகர, மாநகர தேர்தல்களின் முடிவுகள் அங்குள்ள ஆளும் கட்சியான DPP (Democratic Progressive Party) க்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பெரும் பாதகமான முடிவாக அமைத்துள்ளது.
.
2014 ஆம் ஆண்டு வரை தாய்வானில் ஆட்சியில் இருந்த KMT கட்சி, தாய்வான் சீனாவின் அங்கம் என்பதை ஏற்று, மெதுவாக சீனாவுடன் உறவை புதிப்பித்து வந்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்திருந்த DPP கட்சி சீனாவுடனான உறவுகளை முறித்து, அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட ஆரம்பித்து இருந்தது. DPP அவ்வப்போது சுதந்திர நாடாகும் கருத்துக்களையும் வெளியிட்டும் வந்திருந்தது.
.
Tsai Ing-wen என்ற DPP கட்சியின் தலைவியே தற்போதும் தாய்வானின் ஜனாதிபதியாக உள்ளார். ஆனால் அவரின் கட்சி தேர்தலில் படு தோல்வியை அடைந்ததால் உடனடியா DPP கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.
.
DPP கட்சிக்கு எதிராக போட்டியிட்ட KMT (Kuomintang) கட்சி பெரும் வெற்றியை அடைந்துள்ளது. சீனாவின் மாஓ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி விரட்டியபோது Chiang Kai-shek தலைமையில் தாய்வானுக்கு தப்பி ஓடிய கட்சியே KMT. ஆனால் அக்கட்சி தற்போது சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.
.
2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் KMT வென்றால், அமெரிக்காவின் ஆதிக்கம் தைவானில் இல்லாது போகும்.

.