முதல் முறையாக ரஷ்யாவில் சவுதி அரசர்

Saudi

சவுதி அரசர் சல்மான் (King Salman) ரஷ்யாவுக்கு பணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பதவியில் உள்ள சவுதி அரசர் ஒருவர் ரஷ்யா செல்வது இதுவே முதல் தடவை.  இவரின் பயணத்தின் முக்கிய நோக்கம் மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கத்தை குறைக்க ரஷ்யாவை நாடுவதாகும்.
.
இந்த பயணத்தின் போது, இன்று வியாழன், சவுதி ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகள், Kornet வகை tank எதிர்ப்பு ஏவுகணைகள் என்பன உட்பட பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்படும் உள்ளது. அத்துடன் AK-47 வகை துப்பாக்கிகளை சவுதியில் கூட்டாக தயாரிக்கவும் ரஷ்யா இணங்கி உள்ளது.
.
மத்திய கிழக்கிலும், பாரசீக வளைகுடாவில் அமைதியும், பாதுகாப்பும் உருவாக்குவதற்கு ஈரான் மற்றைய நாடுகளுள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றுள்ளார் சவுதி அரசர். ஈரான் யெமென் (Yemen) நாட்டு சிறுபான்மை இனத்துக்கு (Houthi) ஆதரவு வழங்குவதையே அவர் இங்கு குறிப்பிட்டு உள்ளார். அதேவேளை சவுதியும் சிரியா போன்ற நாடுகளுள் தலையிட்டு உள்ளது.
.
சிரியாவில் ஈரானும், ரஷ்யாவும் சவுதி வளர்க்கும் ஆயுத குழுக்களுக்கு எதிராகவே சண்டையில் ஈடுபட்டு உள்ளன.
.
சவுதியின் ஈரான் எதிர்ப்பு தொடர்பான நிலைப்பாட்டில் ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவென்பதை ரஷ்யா பகிரங்கப்படுத்தவில்லை.

.