முன்னாள் பங்களாதேச பிரதமருக்கு 5 வருடங்கள்

Bangladesh

முன்னாள் பங்களாதேச பிரதமர் Khaleda Zia என்பவருக்கு இன்று வியாழன் 5-வருட சிறை தண்டனை வழங்கப்டுள்ளது. தனது ஆட்சி காலத்தில் $252,200 பெறுமதியான பணத்தை Zia Orphanage Trust என்ற சேவையில் இருந்து தனது சொந்த வங்கி  கணக்குக்கு மாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவருக்கு 5-வருட சிறை கிடைத்துள்ளது.
.
சிறை தண்டனையை வழங்கிய நீதிபதி Mohammad Akhteruzzaman முன்னாள் பிரதமர் வயது முதிர்ந்தவர் என்றபடியாலும், ஒரு முன்னாள் பிரதமர் என்றபடியாலும், குறைந்த தண்டனையை பெறுகிறார் என்றுள்ளார். தண்டனை பெற்ற முன்னாள் பெண் பிரதமரின் வயது 72. அத்துடன் முன்னாள் பிரதமரின் மகனுக்கும் 5-வருட சிறைத்தண்டனை வழங்கப்டுள்ளது.
.
ஆனால் Ziaவின் கட்சியான BNP (Bangladesh National Party) மேற்படி வழக்கும், தீர்ப்பும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றுள்ளது. அடுத்துவரும் தேர்தலில் Zia போட்டியிடுவதை தடுக்கும் நோக்கமே இந்த வழக்குக்கு காரணம் என்றுள்ளது BNP.
.
இந்த தீர்ப்பின் பின்னான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சுமார் 3,500 எதிரணி ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.

Ziaவின் கணவர் Ziaur Rahman முன்னாளில் பிரதமராக பதவி வகித்தவர். தனது கணவனின் மரணத்தின் பின் Zia அரசியலுக்கு வந்திருந்தார். இவர் 1991-1996 காலப்பகுதியிலும், 2001-2006 காலப்பகுதியிலும் பிரதமராக பதவி வகித்தவர்.
.