முன்னாள் மலேசிய பிரதமரிடம் $273 மில்லியன் பொருட்கள்

Najib

முன்னாள் மலேசிய பிரதமர் Najib Razak வீட்டில் இருந்து சுமார் $273 மில்லியன் வெகுமதியாக பொருட்களை மலேசிய போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த விபரங்களை மலேசிய போலீசார் இன்று புதன் தெரிவித்து உள்ளனர். பணம், நகைகள், விலை உயர்ந்த கைப்பைகள், விலை உயர்ந்த மணிக்கூடுகள் என்பன கைப்பற்றப்பட்ட பொருட்களுள் அடங்கும்.
.
மலேசிய போலீஸ் அதிகாரியான Amar Singh கூற்றுப்படி, கடந்த மாத நடுப்பகுதியில் முன்னாள் பிரதமரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை விலைமதிப்பிடும் பணியில் சுமார் 150 போலீசார் ஒரு மாதகாலமாக ஈடுபட்டிருந்தனர்.
.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் சில பின்வருமாறு:
(1) சுமார் $30 மில்லியன் பெறுமதியான 26 நாடுகளின் பணம்.
.
(2) சுமார் $200 மில்லியன் பெறுமதியான 12,000 நகைகள். (அவற்றுள் 1,400 அட்டியல்கள் , 2,200 மோதிரங்கள், 2,100 சோடி காப்புக்கள், 2,800 சோடி தோடுகள் என்பனவும் அடங்கும்.)
.
(3) 567 விலை உயர்ந்த கைப்பைகள்
.
(4) சுமார் $20 மில்லியன் பெறுமதியான 423 கைக்கடிகாரங்கள்
.
(5) சுமார் $100,000 பெறுமதியான sunglasses.
.

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மலேசிய தேர்தலில் முன்னாள் பிரதமர் படுதோல்வி அடைந்திருந்தார். அவரின் ஆட்சி காலத்தில் அவரால் உருவாக்கப்பட்ட 1MDB திட்டத்தில் இருந்து சுமார் $700 மில்லியன் பணம் களவாடப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமரும், அவரின் மனைவியும் (Rosmah Mansor) மலேசியாவை விட்டு வெளியேற தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
.