மும்பாய் விழா ஒன்றில் கூடிய 11 பேர் வெய்யிலுக்கு பலி

மும்பாய் விழா ஒன்றில் கூடிய 11 பேர் வெய்யிலுக்கு பலி

இந்தியாவின் மும்பை நகரில் பரிசளிப்பு விழா ஒன்றுக்கு பெருவெளியில் கூடியிருந்தோரில் 11 பேர் சூரிய வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். அங்கு வெப்பநிலை சுமார் 38 C (100 F) ஆக இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் நீண்ட நேரமாக நிழல் எதுவும் இன்றிய மைதானத்தில் இருந்துள்ளனர்.

Appasaheb Dharmadhikari என்பவருக்கு சமூக சேவை விருது வழங்கும் பொருட்டு மஹாராஷ்டிரா மாநில முதல்வர், மற்றும் மத்திய Home அமைச்சர் ஆகியோர் கூடிய கூட்டத்துக்கு சுமார் 1 மில்லியன் மக்கள் வந்திருந்தனர்.

அவர்களில் சுமார் 600 பேர் கூடிய வெப்பநிலையால் பாதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் வரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் மிகையான வெப்பநிலை காரணமாக திங்கள் முதல் ஒரு கிழமைக்கு பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மூடி உள்ளது.

அரசின் உதாசீனமே (negligence) 11 பலியாக காரணம் என்று கூறும் எதிர் கட்சி, விசாரணை ஒன்றை செய்ய கேட்டுள்ளது.