முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் (Adani Group) இஸ்ரேல் துறைமுக கொள்வனவு முற்று பெற்றுள்ளது. அதானி நிறுவனம் வட இஸ்ரேலில் உள்ள Haifa துறைமுகத்தின் ஒரு பகுதியை $1.15 பில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளது.

ஏறக்குறைய 99% பொருட்கள் கப்பல் மூலமே இஸ்ரேலுக்கு வருவதால், இஸ்ரேலில் இருந்து செல்வதால் அங்கு துறைமுகம் மிக பிரதானமானது.

சீனாவின் Shanghai International Port Group (SIPG) ஏற்கனவே Haifa குடாவில் இன்னோர் துறைமுகத்தை இயக்கி வருகிறது.

சீனாவின் $1.7 பில்லியன் பெறுமதியான துறைமுகம் 18,000 அல்லது அதற்கும் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்களை காவும் கப்பல்கள் செல்ல வசதியானது.

மனிதாபிமான கொள்கைகளை கைப்பற்றிய இந்தியா நீண்ட காலமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் தற்போது அது பொருளாதார கொள்கைகள் காரணமாக இஸ்ரேல் ஆதரவு நாடாகி உள்ளது.