மூன்றாம் தடவை வலுவிழந்து பிரதமர் ஆகும் மோதி

மூன்றாம் தடவை வலுவிழந்து பிரதமர் ஆகும் மோதி

பிரதமர் மோதி தலைமையில் ஆனால் வெகுவாக வலுவிழந்த பா. ஜ. கட்சி கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பா. ஜ. கட்சி தெற்கு மாநிலங்களில் மட்டுமன்றி உத்தர பிரதேசம் போன்ற பா. ஜ. கோட்டைகளிலும் வலுவிழந்து உள்ளமை வியப்பாக உள்ளது.

இம்முறை “Ab ki baar, 400 paar” என்று தனது பிரச்சாரங்களில் 400 ஆசனங்களை கைப்பற்றும் நோக்கத்தை மோதி தெரிவித்து இருந்தாலும் பா. ஜ. இம்முறை 50% ஆசனங்களை வெல்வதே கேள்விக்குறியாகி உள்ளது. பா. ஜ. 272 ஆசனங்களை (50%) வெல்ல முடியாத நிலையில் கூட்டணி கட்சிகளின் கட்டுப்பாடில் ஆட்சி செய்ய தள்ளப்படும்.

வலுவிழந்தாலும் நேருவுக்கும் அடுத்து மோதியே தொடர்ச்சியாக மூன்றாம் தடவை பிரதமர் ஆகிறார்.

தமிழ்நாட்டில் பா. ஜ. 0 ஆசனங்களை கைப்பற்றி படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. பா. ஜ. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும் தோல்வி அடையும் நிலையில் உள்ளார்.

பா. ஜ. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தாலும் சில ஆசனங்களையாவது கைப்பற்றி இருக்கலாம். ஆனால் வடக்கு தெற்கை ஆழ முனைந்து தோல்வி அடைந்துள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ. மீண்டும் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க தள்ளப்படலாம்.

பா.ஜ. வலு இழந்தாலும் அது காங்கிரசின் வலுவாக மாறவில்லை. பதிலுக்கு தி.மு.க. போன்ற பிரதேச கட்சிகளே வலு அடைந்து உள்ளன.

புலி ஆதரவு கொண்ட இலங்கை தமிழர் அண்ணாமலையை பிரித்தானிய அழைத்து வாக்களிப்பு உரிமை இல்லாத நிலையிலும் தமது ஆதரவை தெரிவித்து இருந்தனர். உண்மையில் அண்ணாமலை மீது புலி தமிழருக்கு அன்பு வர காரணம் இவர்களுக்கு தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த காழ்பே. 

புலிகள் தமது விரோதிகளாக கொண்டிருந்த தி.மு.கவும், காங்கிரசும் புலிகளை இறுதி அழிவில் இருந்தே காப்பாற்றவில்லை என்பதே இலங்கை புலி தமிழரின் தி.மி.க., காங்கிரஸ் மீதான காழ்ப்புக்கு காரணம். முள்ளிவாய்க்கால் அழிவின்போது இவர்களுக்கு அண்ணாமலையை யார் என்று தெரிந்திருக்கவில்லை.