மெக்ஸிக்கோவில் மீண்டும் நிலநடுக்கம்

MexicoQuake

இன்று செய்வாய் கிழமை மீண்டும் ஒரு நிலநடுக்கம் மெக்ஸிக்கோவை தாக்கியுள்ளது. மெக்ஸிக்கோவின் தலைநகரான Mexico Cityயை 7.1 அளவிலான (7.1 magnitude) இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த நடுக்கத்துக்கு பலியானோர் தொகை தற்போது 119 ஆக உள்ளது.
.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:14 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்துக்கு பல மாடி கட்டிடங்களும், பாலங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன.
.
அமெரிக்காவின் Geological Survey இந்த நடுக்கத்தின் மையம் Mexico Cityக்கு தெற்கே 122 km தூரத்தில் உள்ளது என்கிறது. இந்த மையத்தின் ஆழம் சுமார் 50 km என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
.

சிலநாட்களின் முன் 8.1 அளவிலான இன்னோர் நடுக்கம் மெக்ஸிக்கோவின் பசுபிக் கடலோரத்தை தாக்கி இருந்தது. அந்த நடுக்கத்துக்கு 90 பேர் வரை பலியாகி இருந்தனர்.
.