மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ (Mexico) நாட்டில் உள்ள Mexico City என்ற நகரில் சிறு ரயில் செல்லும் மேம்பாலம் ஒன்று ரயிலுடன்  இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 23 பேர் பலியாகியும், 65 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

பாலம் உடைந்து விழ, அதில் பயணித்த ரயிலும் முறிந்து வீழ்ந்துள்ளது. அப்பொழுது கீழே வீதியில் ஒரு கார் இருந்தாலும் அதன் சாரதி தப்பியுள்ளார்.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள Olivos நிலையத்துக்கு அண்டிய இப்பகுதி மேம்பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.

2017ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக இந்த மேம்பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு இருந்தன என்றும், அவை பின்னர் திருத்தப்பட்டு இருந்தன என்றும் கூறப்படுகிறது.