மேற்கிடம் ஏமாந்த செலென்ஸ்கி NATO இணைவை கைவிட தயார்?

மேற்கிடம் ஏமாந்த செலென்ஸ்கி NATO இணைவை கைவிட தயார்?

கடந்த 12 தினங்களாக இடம்பெறும் யுத்தத்தின் பின் மேற்கினதும், நேட்டோவினதும் கபட நாடகத்தை அறிந்த யுக்கிரைனின் சனாதிபதி செலென்ஸ்கி (Zelensky) தனது நாடு NATO அணியில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளது என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

யுக்கிரைன் நேட்டோ அணியில் இணைவதை கடுமையாக எதிர்க்கும் ரஷ்யா கடந்த 12 தினங்களுக்கு முன் யுக்கிரைன் மீது இராணு தாக்குதலை ஆரம்பித்து இருந்தது.

ABC என்ற செய்தி நிறுவனத்தின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செலென்ஸ்கி நேட்டோவுடன் இணையும் எண்ணத்தை தாம் கைவிட தயாராக உள்ளனர் என்ற தொனியில் பதிலளித்து உள்ளார். நேட்டோவுடனான இணைவு தொடர்பான அவரின் கூற்று “I have cooled down regarding (NATO)” என்றும் “NATO is not prepared to accept Ukraine” என்றும் உள்ளது.

NATO, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் யுக்கிரைன் வான்பரப்பு மீது விமான தடை விதிக்காமையே செலென்ஸ்கியின் விசனத்துக்கு முதன்மை காரணம்.

செலென்ஸ்கி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் இணக்கத்துக்கு வந்தால் அது அமெரிக்காவுக்கு பாரிய பின்னடைவு ஆகும். ஆப்கானிஸ்தானில் இருந்து தோல்வியுடன் பின்வாங்கி சில மாதங்களில் மீண்டும் ஒரு தோல்வியை அமெரிக்காவின் சனாதிபதி பைடேன் சந்திக்க நேரிடலாம். அந்நிலையை தவிர்க்க விரும்பின், அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் மோதல் அவசியம்.