மேலுமொரு வெள்ளை கொடி பலஸ்தீனர் படுகொலை

மேலுமொரு வெள்ளை கொடி பலஸ்தீனர் படுகொலை

காசாவில் வெள்ளை கொடியுடன் Khan Yunis இல் உள்ள தமது இருப்பிடம் நோக்கி சென்றுகொண்டிருந்த 51 வயதுடைய Ramzi abu Sahloul என்ற பலஸ்தீனர் இஸ்ரேல் படைகளால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

முன்னைய சில வெள்ளை கொடி படுகொலைகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தமை போலவே Ramzi படுகொலையும் வீடியோ ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜனவரி 22ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் CNN இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும், பிரித்தானியாவின் ITV இந்த சம்பவம் தொடர்பாக இன்னோர் வீடியோவை வெளியிட்டு உள்ளது.