மோதியின் வாஷிங்டன் வரவுக்கு முன் BBC ஆவணப்படம்

மோதியின் வாஷிங்டன் வரவுக்கு முன் BBC ஆவணப்படம்

இந்திய பிரதமர் மோதி ஜூன் 22ம் திகதி அமெரிக்க காங்கிரசில் உரையாற்றவுள்ளார். வழமையாக அமெரிக்காவுக்கு மிக நெருங்கிய நாடுகளின் தலைவர்களுக்கே இந்த அழைப்பு விடப்படும்.

மோதியின் வருகைக்கு முன் Human Rights Watch, Amnesty International ஆகிய இரண்டு பிரதான மனித உரிமைகள் அமைப்புகளும் BBC தயாரித்த “India: the Modi question” என்ற ஆவணப்படத்தை வாஷிங்டனில் திரையிடவுள்ளன.

இந்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை அங்கு இணையங்களில் ஒளிபரப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் உள்ள BBC அலுவலகங்களும் இந்திய அரசின் தேடுதல்களுக்கு உள்ளாகின.

BBC தனது ஆவணப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் இடம்பெற்ற வமுறைகளில் மோதியின் பங்கை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. அப்போது மோதி குஜராத்தின் முதலமைச்சர்.

இதே காரணத்துக்காக அமெரிக்கா முன்னர் மோதிக்கு விசா வழங்க மறுத்து இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா மோதிக்கு செங்கம்பளம் விரிக்கிறது. சீனாவுக்கு முகம்கொடுக்க அமெரிக்காவுக்கு இந்தியா தேவைப்படுகிறது.