மோதியை சாடும் BBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

மோதியை சாடும் BBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

இந்திய பிரதமர் மோதியை சாடும் பிபிசி ஆவண படம் ஒன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க அக்கால குஜராத் முதலமைச்சர் மோதி தவறியுள்ளார் என்று கூறும் ஆவண படமே தடை செய்யப்பட்டுள்ளது.

India: The Modi Question என்ற என்ற இந்த ஆவணப்படம் இந்தியாவுள் YouTube, Twitter போன்ற இணையங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய சட்டமான IT Rules 2021 க்கு அமையவே மேற்படி தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆவணத்தின் முதல் பாகம் ஜனவரி 17ம் திகதி வெளியிடப்பட்டு இருந்தது.

2002ம் ஆண்டு சுமார் 1,000 முஸ்லிம்கள் குஜராத்தில் கொலை செய்யப்பட்டு இருந்தனர். அதற்கு முன் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீக்கு 59 இந்துக்கள் பலியாகி இருந்தனர்.

அக்காலத்தில் பிரித்தானிய அரசு  முஸ்லிம்கள் மீதான தாக்குதலை ethnic cleansing என்று கூறியமை இந்த ஆவணத்தில் முதல் தடவையாக பகிரங்கம் செய்யப்பட்டது. இக்கலவரத்தில் குறைந்தது 3 பிரித்தானியரும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

2013ம் ஆண்டு மோதி பிரதமர் ஆகிறார் என்பதால் பிரித்தானிய அரசு மோதி மீதான 10 ஆண்டு கால தடையை நீக்கி இருந்தது. அமெரிக்காவும் மோதி மீதான தடையை கைவிட்டு இருந்தது.