மோதியை பின்வாங்க வைத்த உழவர் போராட்டம்

மோதியை பின்வாங்க வைத்த உழவர் போராட்டம்

சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்திய பிரதமர் மோதியின் புதிய உழவர் தொடர்பான சட்டத்துக்கு எதிராக போராடிய உழவர் இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். பிரமர் மோதியின் அரசு 2020ம் ஆண்டு தான் நடைமுறை செய்த உழவர் தொடர்பான சட்டத்தை பின்வாங்க இணங்கி உள்ளது.

கரோனா மற்றும் பாதகமான காலநிலையிலும் போராடிய உழவர் இறுதியில் தமது வெற்றியை அடைந்து உள்ளனர். இவர்களுக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் புஞ்சாப், ஹரியானா போன்ற விவசாய மாநிலத்தவர்.

முன்னைய நடைமுறைப்படி அறுவடை காலங்களில் அரசு உற்பத்திகளை நியாய விலைக்கு கொள்வனவு செய்து பின் அறுவடை குன்றிய காலத்தில் அவற்றை சந்தைப்படுத்தும். அந்த முறையை மோதி அரசு கைவிட்டு, அரசுக்கு பதிலாக பெரிய நிறுவங்கள் அறுவடையை கொள்வனவு செய்ய வசதி செய்ய முனைந்தது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் காலூன்ற வசதி செய்தது. அதையே உழவர் நிறுத்தி உள்ளனர்.

ஆனாலும் 1960களில் நடைமுறைக்கு வந்திருந்த கூட்டுறவு முறைமை திருந்துவதற்கு இடமுண்டு என்பதையும் உழவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ. கட்சிக்கு ஆதரவு சரிய ஆரம்பித்ததும், அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் இடம்பெறவுள்ளதும் மோதியின் மனமாற்றத்துக்கு காரணம் ஆகலாம்.