யாருக்கு சொல்லியழ 15: பருப்பு கசத்தது, டீசல் இனித்தது

யாருக்கு சொல்லியழ 15: பருப்பு கசத்தது, டீசல் இனித்தது

தற்போது பொருளாதார இடரில் உள்ள இலங்கைக்கு அண்டை நாடான இந்தியா 40,000 தொன் டீசலும், 36,000 தொன் பெட்ரோலும் ‘கடன்’ அடிப்படையில் வழங்கி இருந்தது – நன்கொடையாக அல்ல, கடன் அடிப்படையில். இந்தியாவின் இந்த கடன் வழங்களால் பூரித்துப்போன இலங்கையின் முன்னாள் Cricket விளையாட்டு வீரர் அர்ஜுணா ரணதுங்க இந்தியாவை இலங்கையின் மூத்த அண்ணன் என்று புகழ்பாடி உள்ளார்.

இதே மூத்த அண்ணன் 1987ம் ஆண்டும் இலங்கையின் வடபகுதிக்கு, குறிப்பாக வடமராச்சி பகுதிக்கு, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவு பொருட்களை ‘இலவசமாக’ வழங்கி இருந்தார்.

ஆனால் 1987ம் ஆண்டில் வழங்கப்பட்ட, அதுவும் இலவசமாக வழங்கப்பட்ட, பருப்பு ரணத்துக்காவுக்கு இனித்திருக்கவில்லை.
ஆனால் தற்போது கடனுக்கு வழங்கப்படும் மட்டும் டீசல் நன்றாக இனித்துள்ளதாம்.

அதாவது 1987ம் ஆண்டில் இலவசமாக உணவு பொருட்களை வழங்கி ஒரு துரோகி நாடாக இருந்த இந்தியா தற்போது கடனுக்கு டீசல் வழங்கி மூத்த அண்ணனாகி உள்ளதாம்.

அதற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் கூதல் காயும் பொருட்டு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் மீண்டும் உதவி வழங்க முன்வந்துள்ளார். இவரை ரணதுங்க மூத்த அண்ணனின் துட்ட மகன் என அழைப்பாரோ?

சொந்த அறிவற்ற நாங்கள் எத்தனை துன்பியல் சம்பவங்களை சந்திக்க வேண்டுமோ?

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?