யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாழ்ப்பாண கட்டிட பொருட்கள் கடைகளில் screw (புரி ஆணி) தாங்கோ என்று கேட்டால் தற்போது கிடைப்பது drywall screw களே. “என்ன அண்ணை இது, பழையன மாதிரி செப்பு, பித்தளை, அல்லது இரும்பு screw இல்லையே” என்று கேட்டால் “இப்ப சனம் இதைத்தான் கேட்டு வாங்குகினம்” என்ற பதில் வருகிறது.

வளியில் ஈரப்பதன் (moisture) குறைந்த நாடுகளில் வீடுகள் drywall பயன்படுத்தி கட்டப்படும். குறிப்பாக சுவர்கள் drywall சுவர்களாக இருக்கும். Drywall பலகைகளில் நடுவில் gypsum இருக்கும், இருபுறமும் கடதாசி இருக்கும். அத்துடன் இந்த வீடுகள் மர சட்டங்களால் கட்டப்படும். மர சட்டங்களை மறைக்க drywall பயன்படும். இந்த சுவர்கள் இலங்கையில் கட்டப்படும் சீமெந்து சுவர்களை போல அல்ல. ஈரப்பதன் அதிகமான இலங்கையில் drywall பயன் அற்றது.

Drywall மிகவும் மெதுமையானது. Drywall லில் கையால் ஒரு குத்து விட்டால் அது உடைந்து விடும். அத்துடன் அந்த சுவருக்கு உள்ளே இருக்கும் மரமும் softwood என்று அழைக்கப்படும் விலையில் மலிந்த மெதுமையான மரம். இந்த மரம் பாலை, முதிரை போல பலமானது அல்ல. அதனால் drywall screw பலம் குறைந்த screw. இந்த screw வை இலங்கையின் கடினமான மரங்களில் பயன்படுத்தினால் துன்பம் நிச்சயம்.

அத்துடன் Drywall screw வின் தலை hardwood டில் உடைந்துவிடும். தலை உடைந்த புரி ஆணியை கழட்ட முடியாது.

Snow இல்லாத தமிழ்நாட்டில் ரஜனிகாந்த் winter சப்பாத்துடன் திரையில் தோன்றினால் ஏன் என்று கேட்கக்கூடாது. கேட்டால் ரசிகர்கள் தமது நெற்றிக்கண்ணை திறக்கக்கூடும். யாழ்பாணத்து drywall screw வும் அந்த மாதிரியான விசயம்தான்.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?