யாழ்ப்பாண Anthony Bourdain சமையல் தொலைக்காட்சி

AnthonyB

Anthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும்.
.
Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய இடம்பெறுவது யாழ்பாணத்து நண்டுக்கறியாம் (crab curry).
.
இவரின் யாழ் பயண விவரண படம் (Season 10, Episode 5) அமெரிக்காவின் CNN சேவையில் October 29 ஆம் திகதி மாலை 9:00 (ET) மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த காட்சி Parts Unknown: Sri Lanka என்ற பெயரை கொண்டிருக்கும்.
.
படம்: CNN
.