யுகிரேனின் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் பூட்டின் இணைப்பு

யுகிரேனின் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் பூட்டின் இணைப்பு

Luhansk, Donetsk, Zaporizhia, Kherson ஆகிய நாலு யுகிறேனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இன்று இணைத்துள்ளார் ரஷ்ய சனாதிபதி பூட்டின். அவரின் கருத்துப்படி இன்று முதல் இந்த பகுதிகளில் எவராவது தாக்குதல் செய்தால் அது ரஷ்யா மீது தொடுக்கும் தாக்குதலாகும்.

இப்பகுதிகள் பெரும்பான்மையாக ரஷ்ய இனத்தினரை கொண்டன. சில இடங்களை ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கொண்ட ஆயுத குழுவே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்பகுதிகள் யுகிரேனில் இருந்து பிரிய வாக்கெடுப்பு ஒன்றும் நடைபெற்று இருந்தது.

இந்த இணைப்பை கடுமையாக எதிர்க்கின்றன அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள். இந்த செயலை கண்டித்து ஐ.நா. வில் இன்று வெள்ளி அமெரிக்கா முன்வைத்த எதிர்ப்பு தீர்மானத்தை தனது veto மூலம் முறியடித்து உள்ளது ரஷ்யா.

இந்த நாலு பகுதிகளும் யுகிரேனின் 15% பங்கை கொண்டன. ஏற்கனவே Crimea என்ற யுகிரைன் பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து இருந்தது.

அரசியல் களத்தில் இந்த பகுதிகளை ரஷ்யா இன்று தனதாக்கினாலும், இராணுவ களத்தில் இப்பகுதிகளை தன்வசம் கொண்டிருக்க ரஷ்யா கடுமையாக போராடுகிறது.

ரஷ்யாவின் இச்செயலை கண்டிக்கும் மேற்கு நாடுகள் தாமும் இவ்வகை நாடு பிரிப்புகளை தமது நன்மைக்காக செய்திருந்தன. Kosovo, தென் சூடான், கிழக்கு தீமோர் ஆகியன சில.

அதேவேளை போரில் இணைய விரும்பாத ரஷ்யர் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த பூட்டின் சாதாரண மக்களுக்கு தேவையான பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை, சட்டம் ஒழுங்கை வளர்க்காது போருக்கு மட்டும் அவர்களை அழைக்கிறார்.