யுக்கிரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பம்

யுக்கிரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பம்

யுக்கிரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்து உள்ளன. யுக்கிரைன் தலைநகர் கீவ் (Kyiv) உட்பட பல யுக்கிரைன் நகரங்களில் உள்ள யுக்கிரைன் படைகளின் தளங்கள் மீதே தற்போது தாக்குதல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. சில குண்டுகள் உருவாக்கிய புகை மண்டலங்கள் வீடியோக்கள் மூலம் அறியப்படுகின்றன.

அதேவேளை சில ரஷ்ய படைகள் ஒடேசா என்ற கருங்கடல் துறைமுக பகுதியில் இறங்கி யுக்கிரைன் உள்ளே நகர்வதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க சனாதிபதி உட்பட மேற்கு நாடுகளின் தலைவர்கள் பூட்டினை கடுமையாக விமர்சித்து இருந்தாலும் மேற்கு நாடுகள் எதுவும் தமது படைகளை யுக்கிரைன் உதவிக்கு அனுப்ப இதுவரை முன்வரவில்லை.

ஏற்கனவே ரஷ்யா பயணிகள் விமானங்களை யுக்கிரைன் மீது பறக்க வேண்டாம் என்று கூறி இருந்ததால் யுக்கிரைன் வான் பரப்பு விமானங்கள் இன்றி வெறுமையாக உள்ளது.

தாக்குதல்கள் யுக்கிரைன் நேரப்படி வியாழன் காலை 5:00 மணியளவில் ஆரம்பித்து உள்ளன.