யுக்கிறேனில் ரஷ்ய படைகளுடன் இந்தியர்கள்

யுக்கிறேனில் ரஷ்ய படைகளுடன் இந்தியர்கள்

யுக்கிறேனில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக இந்தியர்களும் போரிடுவதாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இந்த இந்தியர்கள் யுக்கிறேனில் ஆயுதம் ஏந்தி சண்டையிடுகிறார்களா அல்லது ரஷ்ய இராணுவத்துக்கு வேறு உதவிகள் செய்கிறார்களா என்று தமக்கு தெரியாது என்று இந்தியா கூறியுள்ளது.

இந்தியா இந்தியர்களை யுத்தங்களில் பங்கெடுக்காது விலகி இருக்குமாறு கேட்டு உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவின் Hindu பத்திரிகை 18 இந்தியர்கள் ரஷ்ய படைகளுடன் உள்ளதாக புதன்கிழமை கூறியிருந்தது. இன்னோர் செய்தி 100 க்கும் அதிகமானோர் ரஷ்யாவுடன் இணைந்து போரிட ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகிறது.