யுத்த விமானமும், எரிபொருள் விமானமும் விபத்தில்

KC-130

அமெரிக்காவின் F/A 18 Hornet வகை யுத்த விமானமும், யுத்த விமானங்களுக்கு வானத்தில் வைத்து எரிபொருள் நிரப்பும் KC-130 Hercules வகை விமானம் ஒன்றும் விபத்துக்கு உள்ளானபடியால் இரண்டு விமானங்களும் கடலுள் வீழ்ந்துள்ளன. அப்போது யுத்த விமானத்தில் 2 விமானிகளும், எரிபொருள் நிரப்பும் விமானத்தில் 5 படையினரும் இருந்துள்ளார்.
.
இதுவரை இரண்டு படையினர் மீட்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் பலியாகி உள்ளார். ஏனைய 5 பேரையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி வியாழன் அதிகாலை 2:00 மணியளவில் ஜப்பானின் கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
.
இந்த விமானங்கள் ஜப்பானில், ஹிரோஷிமாவுக்கு அண்மையில் உள்ள Iwakuni தளத்தில், நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகளுக்கு உரியவை.
.
விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

.