யுத்த விமான பாதுகாப்புடன் சவுதி சென்றார் பூட்டின்

யுத்த விமான பாதுகாப்புடன் சவுதி சென்றார் பூட்டின்

ரஷ்யாவின் நான்கு Sukhoi-35s வகை யுத்த விமானங்கள் பாதுகாப்பு வழங்க Ilyushin-96 வகை விமானம் ஒன்றில் ரஷ்ய சனாதிபதி சவுதி சென்றுள்ளார். 

யூக்கிறேன் ஆக்கிரமிப்புக்கு பின் பூட்டின் வெளிநாடுகளுக்கு செல்வதை  தவிர்த்து வந்துள்ளார்.

பூட்டின் சவுதி இளவரசர் Mohammed bin Salman உடன் பேச்சுவார்த்தைகள் செய்வார். குறிப்பாக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதே இருவரின் பிரதான நோக்கமாகும்.

சவுதி செல்லும் வழியில் பூட்டின் முதலில் UAE சென்று இருந்தார். அங்கு பூட்டின் அபுதாபி  சனாதிபதியுடன் உரையாடி இருந்தார்.

கடந்த ஆண்டு பூட்டின் ஈரானுக்கு சென்று Ayatolla Ali Khamenei யுடன் உரையாடி இருந்தார்.