யூக்கிரேனுக்கான அமெரிக்க உதவி விரைவில் அற்று போகும்?

யூக்கிரேனுக்கான அமெரிக்க உதவி விரைவில் அற்று போகும்?

யூக்கிரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் டிசம்பர் மாதத்திற்கு பின் அற்று போகும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க காங்கிரசுக்கு இன்று திங்கள் ஆனுப்பிய அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

யூக்கிரேன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு உதவ சனாதிபதி பைடென் $106 பில்லியன் வழங்குமாறு அமெரிக்க காங்கிரசை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு காங்கிரசில் போதிய ஆதரவு இருக்கவில்லை.

பதிலுக்கு காங்கிரசின் அங்கமான Senate இஸ்ரேலுக்கு மட்டும் உதவி வழங்க முன்வந்தது. அதை பைடென் ஏற்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் யூக்கிரேன் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.

இதுவரை அமெரிக்கா $111 பில்லியன் பெறுமதியான உதவிகளை யூக்கிரேனுக்கு வழங்கி உள்ளது.