யூக்கிறேனில் நீப்புரோ அணைகட்டு உடைந்தது

யூக்கிறேனில் நீப்புரோ அணைகட்டு உடைந்தது

யூக்கிறேனில் உள்ள நீப்புரோ என்ற ஆற்றை (Dnipro River) வழிமறித்து கட்டிய நீப்புரோ என்ற அணைக்கட்டு இன்று உடைந்துள்ளது. அதனால் Kakhovka என்ற அணைக்கட்டில் உள்ள நீர் பல இடங்களை வெள்ளத்தில் அமிழ்த்தும் நிலை தோன்றியுள்ளது.

இந்த அணைக்கட்டை ரஷ்யா உடைத்து என்று யூக்கிறேனும், யூக்கிறேன் உடைத்து என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இப்பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுத்தியாகும்.

இந்த ஆறு ஆக்கிரமித்து உள்ள ரஷ்ய படைகளுக்கும், யூக்கிறேன் படைகளுக்கும் இடையேயான எல்லையாக தற்போது உள்ளது.

அணைக்கட்டில் இரகசியமாக வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து அணைக்கட்டை பலவீனம் ஆக்க  பின் அணைக்கட்டு நீர் அணையை உடைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.