யூக்கிறேன் யுத்த இரகசியங்கள் கசிவில் சந்தேகநபர் கைது

யூக்கிறேன் யுத்த இரகசியங்கள் கசிவில் சந்தேகநபர் கைது

அண்மையில் அமெரிக்கா கொண்டிருந்த யூக்கிறேன் யுத்த புலனாய்வு இரகசியங்கள் Discord என்ற இணையம் மூலம் கசிந்து அமெரிக்காவுக்கு அவலத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இன்று வியாழன் அமெரிக்கா கசிவு தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.

Massachusetts Air National Guard அணியில் அங்கம் கொண்ட 21 வயதுடைய Jack Teixeira என்பவரே FBI ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். Dighton என்ற இடத்தில் வாழும் இவர் online video game அணி ஒன்றில் அங்கம் கொண்டவர்.

கைது செய்யப்பட்டவேளையில் சந்தேகநபர் எதிர்ப்பு எதையும் செய்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கசிந்த ஆவணங்களில் ரஷ்யா, யூக்கிறேன், சீனா, மற்றும் பல அமெரிக்க நட்பு நாடுகள் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு செய்த இரகசியங்கள் இருந்துள்ளன. அத்துடன் மேற்படி இரகசியங்களை வழங்கியவர் விபரங்களும் கசிந்துள்ளன.