ரம்பை கைவிட்டது அவரின் கணக்கியல் நிறுவனம்

ரம்பை கைவிட்டது அவரின் கணக்கியல் நிறுவனம்

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் குடும்பத்துக்கும் கணக்கியல் சேவைகளை செய்து வந்த Mazars USA என்ற கணக்கியல் நிறுவனம் (accounting firm) தாம் ரம்புடனும், அவரின் குடும்பத்துடனுமான தொடர்புகளை துண்டிப்பதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு இந்த மாதம் 9ம் திகதி ரம்புக்கு விடுக்கப்பட்டு உள்ளது.

2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் ரம்ப் நிறுவனத்தின் கணக்கியல், மற்றும் வரி ஆவணங்களை Mazars USA நிறுவனமே தயாரித்து இருந்தது என்றாலும் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை தாம் உறுதிப்படுத்த முடியாது என்கிறது Mazars USA. ரம்ப் தரப்பு வழங்கிய தரவுகளின் அடைப்படியிலேயே தாம் ஆவணங்களை தயாரித்ததாகவும் Mazars USA கூறியுள்ளது.

நியூ யார்க் attorney general மற்றும் Manhattan district attorney ஆகியோர் முன்னாள் சனாதிபதி ரம்ப் மீது கடுமையான வழக்குகளை தொடரும் நிலையிலேயே ரம்பின் முன்னாள் கணக்கியல் நிறுவனம் தன்னை ஆபத்தில் இருந்து விடுவிக்க முனைந்து உள்ளது.

ரம்ப்  தனது சொத்துக்களின் பெறுமதியை மிகைப்படுத்தி, அவற்றை பொறுப்பு வைத்து பெருமளவு கடன்களை பெற்று உள்ளார் என்றும், மிகைப்படுத்திய பெறுமதிக்கு ஏற்ப காப்புறுதி பெற்று உள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

ரம்பின் கணக்கியல் நிறுவனம் விலகிக்கொண்டது ரம்பை மேலும் இடருள் தள்ளி உள்ளது.