ரம்பை விட்டு விலகுகிறார் மனைவி மெலனியா?

ரம்பை விட்டு விலகுகிறார் மனைவி மெலனியா?

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பை விட்டு அவரின் மனைவி மெலனியா (Melania Trump) மெல்ல விலகுகிறாரா என்று சந்தேகிக்க வைக்கின்றன அவரின் அண்மைக்கால செயற்பாடுகள்.

ஜூன் மாதம் 14ம் திகதி இடம்பெற்ற ரம்பின் 75வது பிறந்ததின கொண்டாட்டத்தில் மனைவி மெலனியாவை காணவில்லை என்று கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதுவும் அறியப்படவில்லை. ரம்ப் புளோரிடாவில் வாழ மெலனியா அடிக்கடி நியூ யார்க் நகரில் காணப்பட்டு உள்ளார். நியூ யார்க் நகரிலேயே மெலனியாவின் சகோதரியும், பெற்றாரும் வாழ்கின்றனர்.

புளோரிடா மாநிலத்தில் உள்ள ரம்பின் சொத்தான Mar-a-lago மாளிகையில் மெலனியா சிலவேளைகளில் காணப்பட்டு இருந்தாலும், அங்கும் அவர் தனது 6 அடி 7 அங்குல உயரம் கொண்ட மகன் Barron உடனேயே காணப்பட்டு உள்ளார். அந்த மாளிகையில் மெலனியாவுக்கு ஒரு அலுவலகமும் உண்டு.

நியூ யார்க் நகரில் மெலனியாவுக்கு சொந்த இருப்பிடம் இருந்தாலும் அவர் தனக்கென ஒரு சொந்த வீட்டை புளோரிடா மாநிலத்திலும் கொள்வனவு செய்ய முனைகிறார் என்றும் கூறப்படுகிறது. மகன் Barron புளோரிடாவிலேயே கல்வி கற்கிறார்.