ரம்ப், உன் சந்திப்பு?

NorthKoreaTest

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை (Kim Jong Un) சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இணங்கி உள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு செயலாளர் Chung Eui-yong கூறியுள்ளார்.
.
இன்று வியாழன் வெள்ளை மாளிகையில் ரம்பை சந்தித்த பின்னரே Eui-yong இவ்வாறு கூறி உள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு நடாத்த விரும்பி உள்ளார் என்ற செய்தியையே இன்று ரம்பிடம் தென்கொரிய பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார்.
.
ரம்ப் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் சந்திக்கலாம் என்றும் தென்கொரிய பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.
.
கடந்த திங்கள் கிழமை தென்கொரியாவின் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தென்கொரிய குழு ஒன்று வடகொரியா சென்று கிம் ஜோங் உன்னை சந்தித்திருந்தது.
.

வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுமா, அவ்வாறு கைவிடின் ஈடாக என்ன கேட்கும் என்பதெல்லாம் அறியப்படவில்லை.
.