ரம்ப் கைதாகலாம், வரலாற்றில் முதல் தடவை

ரம்ப் கைதாகலாம், வரலாற்றில் முதல் தடவை

அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி விரைவில் கைதாகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. நியூ யார்க் ஜூரி ரம்ப் criminal குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்கவேண்டும் என்று இன்று வியாழன் கூறியுள்ளது.

ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016 சட்டவிரோத முறையில் பணம் ($130,000 hush money) வழங்கி உண்மையை மறைக்க முயன்றார் என்பதே ரம்ப் மீதான குற்றச்சாட்டு.

ரம்ப் அடுத்த கிழமை சரண் அடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு தற்போது Florida மாநிலத்தில் வாழும் ரம்ப் நியூ யார்க் மாநிலம் செல்லவேண்டியிருக்கும்.

2016ம் ஆண்டில் ரம்ப் சனாதிபதி தேர்தலில் போட்டியிடட நேரத்திலேயே இந்த பணம் வழங்கப்பட்டு உள்ளது.

ஒரு நிகழ்கால அல்லது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் தடவை.