ரஷ்யாவில் விழுந்த விண்கல், 1000 வரை காயம்

இன்று உள்ளூர் நேரப்படி காலை 9:20 மணியளவில் ரஷ்யாவின் Ural  மலைப்பகுதியில் பாரிய விண்கல் ஒன்று வீழ்ந்துள்ளது. இப்பகுதி மொஸ்கோவில் இருந்து சுமார் 1500 km கிழக்கே உள்ளது. இந்த நிகழ்வின்போது சுமார் 1000 பெயர்கள் காயமடைத்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிதறி பறந்த கண்ணாடி துண்டுகள் காரணமாகவே காயமடைந்து உள்ளனர்.

இந்த கல் சுமார் 10 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்கல் வளிமண்டலத்துள் நுழையும்போது சுமார் 54,000 km/h ஆக இருந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது. பூமிக்கு மேலே 30 km முதல் 50 km உயரத்தில் இக்கல் பல பாகங்களாக உடைந்தும் இருக்கலாம்.