ரஷ்யாவுக்கு எதிரான பயனற்ற ஐ. நா. தீர்மானம் ஏற்பு

ரஷ்யாவுக்கு எதிரான பயனற்ற ஐ. நா. தீர்மானம் ஏற்பு

இன்று புதன்கிழமை ஐ.நா. பொதுச்சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான ஆனால் பயன் எதுவுமற்ற தீர்மானம் 143 நாடுகளின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரஷ்ய உட்பட 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிர்த்தை வாக்களிக்க, 35 நாடுகள் வாக்களியாது பின்வாங்கி உள்ளன.

இன்றைய தீர்மானம் ரஷ்ய உடனே யுத்தத்தை நிறுத்தி, ரஷ்யாவுடன் அண்மையில் இணைத்த Donetsk, Luhansk, Kherson, Zaporrizhia ஆகிய யூக்கிறேன் பகுதிகளை விடுவிக்க கேட்டுள்ளது.

கடந்த மாதம் இவ்வகை தீர்மானம் ஒன்று ஐ.நா. சட்டமாகக்கூடிய Security Council வாக்கெடுப்புக்கு விட்டபோது அதை ரஷ்யா தனது வீட்டோ (veto) மூலம் முறியடித்தது. அந்த தீர்மானத்தையே அமெரிக்காவுக்கும், மேற்கும் இன்று பொது சபையில் வாக்கெடுப்புக்கு விட்டுள்ளன. பொதுச்சபை தீர்மானங்கள் பயன் அற்றவை.

இன்றைய தீர்மானத்தை ரஷ்யாவுடன் பெலரூஸ் (Belarus), வடகொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்து உள்ளன.

இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கியூபா, தென் ஆபிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் உட்பட 35 நாடுகள் வாக்களியாது பின்வாங்கி உள்ளன.

தெற்கு ஆசியாவில் பங்களாதேசம், நேபாள், பூட்டான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்து உள்ளன.