​ரஷ்யாவை விரட்டுவதில் யூக்கிறேன் வெற்றியில்லை

​ரஷ்யாவை விரட்டுவதில் யூக்கிறேன் வெற்றியில்லை

​தமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை விரட்டி அடிக்கும் யூக்கிரேனின் இராணுவ முயற்சி குறிப்பிடக்கூடிய முன்னகர்வு எதையும் அடையவில்லை என்று மேற்கு நாடுகள் அறிகின்றன.

அமெரிக்கா உட்பட பல நேட்டோ நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களுடன் யூக்கிறேன் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் ரஷ்ய படைகளை விரட்ட முனைந்தாலும் ரஷ்ய படைகளின் இராணுவ அரண்களை யூக்கிறேன் ஊடறுக்க முடியாது தவிக்கின்றன என்று மேற்கு நாடுகள் அறிகின்றன.

ரஷ்யா பல தரப்பு அரண்களை அமைத்துள்ளது. மிக அதிக அளவில் வெடிகளை நிலத்தில் புதைத்தும் உள்ளது.

அடுத்துவரும் 2 மாதங்களுள் யூக்கிறேன் தனது நிலத்தை மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து பறிக்காவிடின் பின் குளிர்காலம் ஆரம்பித்து படை நகர்வுகள் கடினம் ஆகும்.

அத்துடன் இந்த யுத்தத்தின் முடிவு என்ன என்பதை அறிய முடியாது மேற்கு குழப்பம் அடையும். மேற்கு தொடர்ந்தும் பணம், இராணுவ தளபாடங்களை இலவசமாக வழங்க முடியாது.