ரஷ்யா வெற்றிகரமாக ஏவிய மாக் 7 ஏவுகணை

ரஷ்யா வெற்றிகரமாக ஏவிய மாக் 7 ஏவுகணை

இன்று திங்கள் தாம் மாக் 7 வேகம் கொண்ட (Mach 7, ஒலியிலும் 7 மடங்கு அதிக வேகம்) cruise ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக ஏவியதாக ரஷ்யா கூறியுள்ளது. Zircon (அல்லது Tsirkon) என்ற பெயர்கொண்ட இந்த cruise missile வகை ஏவுகணை ஒலியிலும் 7 மடங்கு அதிகரித்த வேகத்தில் சென்று 350 km தூரத்தில் இருந்த சோதனை குறியை வெற்றிகரமாக தாக்கி உள்ளது.

இந்த ஏவுகணை Admiral Gorshkov யுத்த கப்பலில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் இந்த ஏவுகணை யுத்த கப்பல், நீர்மூழ்கி இரண்டிலும் இருந்து ஏவப்படக்கூடியது. சோதனைக்கு இந்த ஏவுகணை மாக் 7 வேகத்தில் சென்று இருந்தாலும், யுத்தத்தில் இது மாக் 9 வேகத்தில் (3.063 km/s) செல்லும் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். அத்துடன் இது 1,000 km தூரம் சென்று தாக்கக்கூடியது.

அமெரிக்க பாதுகாப்பு ரஷ்யா போன்ற எதிரிகள் தம் மீது ஏவும் ஏவுகணைகளை இடைவழியில் தடுத்து அழிக்க THAAD (Terminal High Altitude Area Defense) போன்ற தடுப்பு ஏவுகணைகளை கொண்டு இருந்தாலும் அந்த தடுப்பு ஏவுகணைகளின் வேகம் மாக் 9 வரையானது அல்ல. அதனால் மேற்கின் ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் Zircon ஏவுகணையை தடுக்க பயனற்றதாக இருக்கும்.

அடுத்த கிழமை இடம்பெறவுள்ள மாஸ்கோ விமான கண்காட்சியில் (Moscow Air Show) ரஷ்யா புதியதோர் யுத்த விமானத்தையும் அறிவிக்க உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த புதிய யுத்த விமானம் 2015ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த அமெரிக்காவின் F-35 Lightning II  fighter வகைக்கு நிகரானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.