ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

இந்த மாதம் 7ம் திகதி ரஷ்யா தனது Zircon என்ற hypersonic ஏவுகணையை யூக்கிறேன் மீது ஏவியதாக யூக்கிறேன் கூறியுள்ளது. அப்படியாயின் ரஷ்யா Zircon வகை hypersonic ஏவுகணையை யுத்த முனையில் பயன்படுத்தியது இதுவே முதல் தடவை.

Zircon ஏவுகணை Mach 8 (மாக் 8) வேகத்தில் சென்று குறியை தாக்க வல்லது. அதாவது இது ஒலியின் வேகத்திலும் 8 மடங்கு வேகத்தில் (9,900 km/h) செல்வது.

இவ்வளவு வேகத்தில் செல்லும் ஏவுகணையை தடுத்து அழிக்க தடுப்பு ஏவுகணை எதுவும் எந்த நாட்டிடமும் இல்லை. அமெரிக்காவின் Patriot தடுப்பு ஏவுகணையும் Zircon ஏவுகணையை தடுத்து அழிக்க முடியாது.

யூக்கிறேன் தாக்குதலில் Zircon சாதாரண வெடி பொருளையே கொண்டிருந்தது. ஆனால் Zircon தேவைப்படும் நேரத்தில் அணு குண்டுகளையும் காவக்கூடியது.