ரஷ்ய எண்ணெய்க்கு சீன பணம் செலுத்த இந்தியா மறுப்பு

ரஷ்ய எண்ணெய்க்கு சீன பணம் செலுத்த இந்தியா மறுப்பு

மேற்கு நாடுகள் யுக்கிறேன் ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யா மீது தடை விதித்த பின் ரஷ்யாவின் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்தது. அந்த மலிந்த எரிபொருளை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இந்தியா இந்திய ரூபாய் மூலம் ரஷ்ய எரிபொருளுக்கான பணத்தை செலுத்தி இருந்தாலும் தற்போது ரஷ்யா இந்திய ரூபாய்களை ஏற்க மறுக்கின்றது. ஏற்கனவே தம்மிடம் தேங்கி உள்ள இந்திய ரூபாய்களை பயன்படுத்தி ரஷ்யாவால் எதையும் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.

அதேவேளை மேற்கின் தடை காரணமாக ரஷ்யாவுக்கான அனைத்து பொருட்களும் தற்போது சீனா மூலமே கிடைக்கிறது. அதனால் ரஷ்யாவுக்கு அதிகம் சீன நாணயமான யுவான் தேவைப்படுகிறது. அதனால் ரஷ்யா இந்தியாவை யுவான் மூலம் பணத்தை செலுத்த அழுத்துகிறது.

ஆனால் இந்தியா உலக சந்தையில் சீனாவின் யுவான் வலு அடைவதை விரும்பவில்லை. அதனால் யுவானை பயன்படுத்த மாறுகிறது. அமெரிக்க தடை காரணமாக இந்தியா அமெரிக்க டொலரையும் பயன்படுத்த முடியாது.

இந்த இழுபறி காரணமாக இந்தியாவுக்கான குறைந்தது 5 கப்பல் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி முடங்கி உள்ளது.