ரஷ்ய ஏவுகணை போலாந்துள் வீழ்ந்ததால் இருவர் பலி

ரஷ்ய ஏவுகணை போலாந்துள் வீழ்ந்ததால் இருவர் பலி

ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று போலாந்து (Poland) என்ற நேட்டோ (NATO) நாட்டுள் வீழ்ந்து வெடித்ததால் இருவர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் நேட்டோ நாடு ஒன்றின் மீது ரஷ்யா செய்த தாக்குதலாகவே கருதப்படுகிறது.

போலந்து-யூகிறேன் எல்லையில் இருந்து சுமார் 24 km தூரம் போலந்தின் உள்ள உள்ள Przewodow என கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இடம் ஒரு தானியம் பதனிடும் ஆலை என்று கூறப்படுகிறது.

நேட்டோவின் Article 5 சட்டப்படி நேட்டோ நாடு ஒன்றின் மீதான தாக்குதல் அனைத்து நேட்டோ நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும். ஆனால் நேட்டோ ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்தே அறியலாம். அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலின் பின்னர் மட்டுமே ஒரு தடவை இந்த சட்டம் நடைமுறை செய்யப்பட்டது.

நேட்டோ உறுப்பினர்கள் விரைவில் கூடி நிலைமையை ஆராயவுள்ளனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தாம் மேற்படி தாக்குதலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.