ரஷ்ய சந்திர கலம் சந்திரனில் மோதி உடைந்தது

ரஷ்ய சந்திர கலம் சந்திரனில் மோதி உடைந்தது

ரஷ்யா அண்மையில் சந்திரனுக்கு செலுத்திய Luna-25 என்ற விண்கலம் சந்திரனில் பத்திரமாக இறங்காது விழுந்து மோதியுள்ளது. சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா தனது கலத்தை சந்திரனில் இறக்க முயல்வது இதுவே முதல் தடவை.

இந்த தரை இறங்கும் கலம் 800 kg எடை கொண்டது.

இந்த கலம் சந்திரனின் தென் துருவத்தில் இறங்க முனைந்தது. தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் பாதுகாப்பாக இறங்கவில்லை. அமெரிக்காவும், சீனாவும் வேறு பகுதிகளில் பாதுகாப்பாக இறங்கி இருந்தன.

இந்த கலம் பாதுகாப்பாக தரை இறங்கி இருந்தால் மட்டுமே விண்வெளி வீரர்கள் அதில் சென்று பாதுகாப்பாக தரை இறங்க முடியும். தென் துருவத்தில் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் இந்தியாவின் கலம் ஒன்றும் இவ்வாறு சந்திரனில் விழுந்து மோதியுள்ளது. தற்போது இந்தியாவின் இரண்டாவது கலம் சந்திரன் நோக்கி செல்கிறது.