ரஷ்ய, சீன நட்பு உடன்படிக்கை நீட்டிப்பு

ரஷ்ய, சீன நட்பு உடன்படிக்கை நீட்டிப்பு

ரஷ்ய சனாதிபதியும், சீன சனாதிபதியும் தமது நாடுகளுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த Treaty of Good Neighborliness and Friendly Cooperation என்ற நட்பு உடன்படிக்கையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளனர். இந்த உடன்படிக்கை முதலில் 2001ம் ஆண்டு கையொப்பம் இடப்பட்டது.

கரோனா காரணமாக வீடியோ தொடர்பு மூலம் அமர்வை கொண்டிருந்த ரஷ்ய, சீன தலைவர்கள் இன்று திங்கள் இந்த அறிவிப்பை செய்துள்ளனர். இருவரும் இந்த மாதம் மட்டும் இரண்டாவது தடவையாக உரையாடி உள்ளனர்.

அமெரிக்கா ரஷ்யாவையும், சீனாவையும் நெருக்கும் இக்காலத்தில், அந்த அழுத்தத்தை கையாளும் நோக்கில் ரஷ்யாவும், சீனாவும் தமது இணைந்த பலத்தை வலுப்படுத்தி உள்ளனர்.

கடந்த 16ம் திகதி அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதியும் ஜெனீவாவில் நேரடியாக சந்தித்து இருந்தாலும், அவர்களுக்கு இடையே எந்தவொரு திடமான இணக்கமும் ஏற்பட்டு இருக்கவில்லை.

அத்துடன் தொழிநுட்ப அறிவு கொண்ட ரஷ்யா சீனாவின் முதலீட்டையும், வேகமாக வளர்ந்து வரும் சீன சந்தையையும் அடையவும் விரும்புகிறது.