ரஷ்ய தளத்தை தாக்க முனைந்தது அமெரிக்கா?

USRussia

சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகளின் Hemeimeem தளத்தை அமெரிக்கா அடையாளம் அறியப்படாத ஆளில்லா விமானங்களை திசை திருப்பி தாக்க முனைந்தன என்று ரஷ்யாவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகர் சென்றுள்ள ரஷ்ய உதவி பாதுகாப்பு அமைச்சர் இன்று இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்.
.
அடையாளம் அறியப்படாதோரால் ஏவப்பட்ட 13 ஆளில்லா விமானங்களை (drones) அப்போது Mediterranean கடல் மேலே பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் Poseidon-8 என்ற இராணுவ விமானமே, தனது manual கட்டுப்பாட்டுள் எடுத்து, ரஷ்ய தளம் மீது ஏவ முனைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நிகழ்ந்துள்ளது.
.
அந்த ஆளில்லா விமானங்களில் 7 விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. மற்றைய 6 விமானங்களையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டுள் எடுத்து, தரையில் இறக்கி உள்ளது.
.
இப்பகுதியில் ஆயுத இயக்கங்களும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நிகழ்த்துவது சாதாரணம் என்றாலும், மேற்படி 13 ஆளில்லா விமானங்களும் manual control மூலம் இயக்கப்பட்டதாகவும், அச்செயலை செய்யும் வல்லமையை ஒருசில நாட்டு இராணுவங்கள் மட்டுமே கொண்டவை என்றும் கூறப்பட்டுள்ளது.
.
இந்த செய்தி தொடர்பாக அமெரிக்கா கருத்து கூற மறுத்துள்ளது.

.