ரஷ்ய யுத்த விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியது

Su24b

ரஷ்யாவின் Su-24 வகை யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் கூற்றின்படி இந்த யுத்த விமானம் துருக்கி எல்லையில் இருந்து 1 km தூரம் சிரியாவின் உள்ளே இடம்பெற்றுள்ளது. Cold-war கால எதிரிகளான ரஷ்யாவும், துருக்கியும் மீண்டு முறுகல் நிலையை அடைந்துள்ளன.
.
இந்த தாக்குதலை “முதுகில் குத்தல்” என்றுள்ளார் ரஷ்யாவின் பூட்டின். தாம் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை இருதரப்பையும் அமைதி காக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டுள்ளன.
.
துருக்கி தாம் இந்த யுத்த விமானத்தை 5 நிமிடத்துள் மொத்தம் 10 தடவைகள் தமது வான் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரித்ததாக கூறியுள்ளது. அதன் பின்னரே சுட்டு வீழ்த்தினராம்.
.
இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வீசப்பட்டாலும் அவர்கள் நிலத்தை அடைய முன் தாம்மால் சுடப்பட்டுவிட்டதாக துருக்கி படைகள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
.

அமெரிக்க அரசு இவ்விடயம் துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பிரச்சனை என்றுள்ளது. 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவே NATO நாடு ஒன்று ரஷ்யாவின் அல்லது USSRஇன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகும்.
.