ரஷ்ய விமானம் வீழ்ந்தது, 71 பேர் பலி

Flight9W703

இன்று ஞாயிரு ரஷ்யாவின் தலைநகர் மஸ்காவிலிருந்து (Moscow) கிழக்கே, Kazakhstan எல்லையில் உள்ள Orsk என்ற நகரம் சென்ற பயணிகள் விமானம் வானேறி சில நிமிடங்களுள் வீழ்ந்துள்ளது. இதில் பயணித்த 65 பயணிகளும், 6 பணியாளர்களும் பலியாகி உள்ளனர்.
.
இன்று வீழ்ந்த Antonov148 வகை பயணிகள் விமானம் ரஷ்யாவின் Saratov விமானசேவைக்கு உரியது.
.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாவிட்டாலும், இந்த விமானத்தின் விமானி விமானம் கோளாறில் உள்ளதை அறிவித்து, அவசரகால தரை இறங்களுக்கு அனுமதி கேட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
.

தற்போது அங்கே winter காலம் ஆகையாலும், விமானம் வீழ்ந்த இடம் வீதி போக்குவரத்து அற்ற இடம் ஆகையாலும் மீட்பு வேலைகள் கடினமானதாகவும் உள்ளன என்கின்றனர் மீட்பாளர்கள்..
.