ரஷ்ய Northern Fleet மீண்டும் அணு ஆயுதங்களுடன்

ரஷ்ய Northern Fleet மீண்டும் அணு ஆயுதங்களுடன்

ரஷ்யாவின் Northern Fleet என்ற வடபகுதி படைப்பிரிவு மீண்டும் அணு ஆயுதங்களுடன் வலம் வர ஆரம்பித்து உள்ளன என்கிறது நோர்வேயின் புலனாய்வு அறிக்கை ஒன்று. அது உண்மையெனில் cold-war காலத்தின் பின் ரஷ்யாவின் வட பிரிவு இவ்வாறு அணு ஆயுதங்களுடன் வலம் வருவது இதுவே முதல் தடவை.

இவை சிறிய அளவிலான tactical அணு ஆயுதங்கள் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அணு ஆயுதங்கள் ரஷ்யாவின் நீர்மூழ்கிகள், கப்பல்கள் ஆகியவற்றில் உள்ளன என்று புலானய்வு கூறுகிறது.

யுகிரேனில் விரும்பிய வெற்றியை அடைய முடியாத நிலையில் உள்ள ரஷ்யா தன் மீது வேறு எவரும் திடீர் தாக்குதல் செய்ய முனையக்கூடாது என்பதே ரஷ்யாவின் அணு ஆயுத நகர்வுக்கு காரணமாகலாம் என்று கருதப்படுகிறது.