ராகுல் காந்தியை உளவுபார்த்தது மோதி அரசு?

இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல்கள், தொடர்புகளை மோதி தரப்பு இஸ்ரேலின் உளவுபார்க்கும் software மூலம் உளவுபார்த்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உண்மை ஏற்கனவே அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியே.

கூடவே Ashok Lavasa என்ற இந்திய தேர்தல் ஆணையாளரின் தொலைபேசியும் மேற்படி spyware மூலம் உளவுபார்க்கப்பட்டு இருந்தது.

உலகம் எங்கும் உள்ள சுமார் 50,000 தொலைபேசிகள் உள்ளே இஸ்ரேலின் NSO Group என்ற நிறுவனம் தயாரித்த Pegasus spyware என்ற உளவுபார்க்கும் software நுழைக்கப்பட்டு, அந்த தொலைபேசிகளின் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டு இருந்தன. அதில் சுமார் 1,000 தொலைபேசிகளை மோதி தரப்பின் உளவு வேலைகளுக்கு பயன்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்திய பத்திரிகையாளர், பொது தொண்டு சேவகர், அரசியல்வாதிகள் ஆகியோரே உளவுக்கு இலக்காகி இருந்தனர்.

சர்வதேச அளவில் பிரெஞ் சனாதிபதியின் தொலைபேசியும் இந்த spyware தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. பாகிஸ்தான் இம்ரான் கானின் தொலைபேசியும் இந்த spyware தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. சவுதி அரச குடும்பமும் இந்த spyware ஐ பயன்படுத்தி தமக்கு முரணாக உள்ளோரை உளவுபார்த்து இருந்தது.