​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

இலங்கை மீதும், ராஜபக்ச குடும்பத்தினர் மீதும் அமெரிக்காவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Hamilton Reserve Bank Ltd என்ற வங்கியே இந்த வழக்கை நியூ யார்க் நகரில் உள்ள நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.

St. Kitts & Nevis தீவுகளை தளமாக கொண்ட மேற்படி வாங்கி தான் bond மூலம் கடனாக வழங்கிய $250 மில்லியன் பணத்தையும், அதற்கான வட்டியையும் பெறவே நீதிமன்றின் உதவியை நாடி உள்ளது. இந்த bond ஜூலை மாதம் 25ம் திகதி திருப்பி அடைக்கப்படல் அவசியம். ஆனால் இலங்கையிடம் அதற்கான பணம் இல்லை. இந்த bond கடனுக்கான வட்டி வீதம் 5.875% ஆகும்.

வழக்கு தாக்கலில் வழங்கப்பட்ட முதல் $250,190,000 என்றும், அதற்கான வட்டி $7,349,331 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் சுமார் $257 மில்லியன் பணத்தை மீளப்பெற முனைகிறது Hamilton வங்கி.

இந்த வழக்கு ராஜபக்ச குடுப்பதினார் மீதும் குற்றம் சாட்டுகிறது. ராஜபக்ச குடும்பத்தினர் bond மூலம் கடன் வழங்கியோரை புறக்கணித்து , தமது நலன்களுக்கு ஏற்ப கடன்களை மீள கட்டும் இணக்கங்களை ஏற்படுத்த முனைகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனால் அமெரிக்க ஓய்வூதியர்களின் முதலீடுகள் சுமார் 80% பெறுமதியை இழக்கும் என்றும் கூறப்படுகிறது.