லண்டனில் மீண்டுமொரு வாகன தாக்குதல்

London

பிரித்தானியாவின் லண்டன் நகரில் மீண்டும் ஒரு வாகன தாக்குதல் இன்று திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது. லண்டன் போலீசார் இதை ஒரு “major incident” என்றும், “there are number of casualties” என்றும் மட்டுமே தற்போது கூறியுள்ளனர். மேலதிக விபரங்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
.
அதேவேளை Muslim Council of Britain (MCB) Finsbury Park என்ற இடத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றில் இருந்து வெளியேறியோர் மீதே வான் ஒன்று தாக்கியதாக கூறியுள்ளது.
.
MCB அமைப்பின் பிரமுகரான Harun Khan இந்த தாக்குதல் தொடர்பாக கூறுகையில் “shocked and outraged” என்றுள்ளார். வட லண்டனில் உள்ள Seven Sisters வீதியில் உள்ள Finsbury Park பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
.

சில கிழமைகளில் முன், London Bridge அருகே, IS சார்பு வாகன தாக்குதல் ஒன்றுக்கு 8 பேர் பலியாகி இருந்தனர்.
.