லண்டனில் வாகனத்தால் தாக்குதல், 6 பேர் பலி

London

லண்டன் மாநகரில் உள்ள லண்டன் பாலம் (London Bridge) அருகே இன்று சனி மாலை 9:00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெற்றும் வருகின்றனர். தாக்குதல்காரர் என்று கருதப்படும் 3 பேர் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டும் உள்ளனர்.
.
லண்டன் பாலம் வழியே சென்ற வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மக்கள் நடைபாதை நோக்கு சென்று இந்த கொலைகளை செய்துள்ளது. அத்துடன் சிலர் Borough Market அருகே நீண்ட கத்தி கொண்டும் தாக்குதல் செய்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. லண்டன் போலீசார் இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே கருதுகின்றனர்.
.

லண்டன் மாநகரின் Mayor Sadiq Khan, ஒரு இஸ்லாமியர், இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்து உள்ளார். அவர் இந்த தாக்குதல் “deliberate and cowardly attack on innocent Londoners” என்றுள்ளார்.
.