லண்டன் அடுக்குமாடி தீக்கு 17 பலி

LondonFire

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Grenfell Tower என்ற 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடியில் தீ பற்றிக்கொண்டதால் குறைந்தது 17 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பலர் தற்போதும் காணாமல் உள்ளனர்.
.
தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் 24 மணி நேரம் எடுத்தது.
.
தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் Grenfell Action Group என்ற குடியிருப்பாளர் குழு இவ்வகை ஆபத்து நிகழலாம் என்று தமது web pageகளில் கூறியுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.
.
இந்த அடுக்குமாடி 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது ஒரு குறைந்த வருமானம் கொண்டோர்க்கான (social housing) குடியிருப்பாகும்.
இது Kensington and Chelsea Tenant Management Organization தனியார் நிறுவனம் ஒன்றால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
.

2009 ஆம் ஆண்டு தென் லண்டன் பகுதியில் இடம்பெற்ற அடுக்குமாடி தீ ஒன்றுக்கு 20 பேர் பலியாகி இருந்தனர்.
.