லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் ஞாயிறு இரவு சுனாமி போல் பாய்ந்து வந்த வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியுள்ளது. இந்த வெள்ளத்துக்கு இதுவரை சுமார் 2,300 பலியாகி உள்ளதாகவும், சுமார் 10,000 பேர் இருப்பிடம் அறியாது உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Derna என்ற லிபியாவின் கடலோர நகரிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் விடியோக்கள் வீதிகளில் வெள்ளம் மக்களை இழுத்து செல்வதை காட்டுகின்றன. பல வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டன.

பலர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் அவர்களின் உடல்கள் மீட்கப்படாது போகலாம்.

நகரில் இருந்து 12 km தூரத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்து அந்த வெள்ளம் நகருக்கு அருகில் உள்ள இரண்டாம் அணைக்கட்டை நிரப்பி உடைத்ததாலேயே திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Derna ஊடே செல்லும் ஆற்று கரையோர வீடுகள் முற்றாக உடைந்து விழுந்து உள்ளன.