வடகொரியாவுடன் நிபந்தனை இன்றி பேச அமெரிக்கா தயார்

NorthKoreaTest

வடகொரியாவுடன் முன் நிபந்தனைகள் எதுவுமின்றி தாம் பேச்சுவார்த்தைகள் நடாத்த தயாராக உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ரில்லெர்சன் (Secretary of State Rex Tillerson) இன்று செய்வாய் கூறியுள்ளார். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடாதவரை தாம் வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை செய்யப்போவது இல்லை என்று இதுவரை கூறிய அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பெரியதோர் திருப்பமாக உள்ளது.
.
வடகொரியா பெருமளவில் அணுவாயுதத்துள் முதலீடு செய்துள்ளதாகவும் (“they have too much invested in it”), அவ்வகை முதலீட்டை கைவிட கேட்பது நடைமுறை சாத்தியம் அற்றது என்பதை ஜனாதிபதி ரம்ப் அறிவார் (“[Trump] is very realistic about that as well”) என்றும் அவர் கூறியுள்ளார்.
.
அதேவேளை வடகொரியா தொடர்ந்தும் கணைகளை ஏவினால் அது பேசசுவார்த்தைகளுக்கு குந்தகமாக அமையும் என்றும் ரில்லெர்சன் கூறியுள்ளார்.
.
முன்னர் ஒருதடவை ரில்லெர்சன் வடகொரியா விடயத்தில் ஒன்றை சொல்ல, ரம்ப் அது நேரத்தை விரயமாகும் செயல் என்று தட்டிக்கழித்து இருந்தார்.
.

அதேவேளை சீனா வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான 1,400 km எல்லை பகுதிகளில் பல அகதி முகாம்களை நிறுவி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
.